அறிவியல் ஆயிரம் : பறக்கும் தட்டு
அறிவியல் ஆயிரம்பறக்கும் தட்டுஎந்த திசையிலும் (360 டிகிரி கோணத்திலும்) பார்க்கும் வசதி கொண்ட பறக்கும் தட்டை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் பெயர் 'இன்வோமூன்'. சிறிய கார் அளவில் இருக்கும். நீளம் 16 அடி. எடை 1130 கிலோ. இதன் வேகம் மணிக்கு 400 கி.மீ. சுற்றும் பரப்பளவு 482 சதுர கி.மீ. இதில் மூன்று பேர் பயணிக்கலாம். 20 - 30 நிமிடத்தில் சார்ஜ் ஏறி விடும். இதன் சத்தம் (ஒலி) 45 டெசிபல். 2028ல் இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 3 கோடி. எதிர்காலத்தில் உற்பத்தி அதிகமாகும் போது விலை ரூ. 50 லட்சமாக குறையும்.