உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்மரப்பொருளில் செயற்கைக்கோள்அமெரிக்காவின் நாசா, ஜப்பானின் ஜாக்ஜா விண்வெளி மையங்கள் இணைந்து மரப்பொருட்களால் ஆன செயற்கைக் கோள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. தற்போது விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் அலுமினிய பொருட்களால் ஆனவை. இவை அதன் ஆயுட்காலம் முடிந்து விண்வெளி குப்பையாக மாறுகிறது. இவை நீண்டநாட்கள் மக்காது. இதனால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இந்நிலையில் மரப்பொருளால் ஆன செயற்கைக்கோள் எனில் இவ்வகை பாதிப்பை குறைக்கலாம் என விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.தகவல் சுரங்கம்உலக தாய்மொழி தினம்ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி, வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்., 21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) 1952ல் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடியதால் உயிரிழந்த தாகா பல்கலை மாணவர்கள் நினைவாக 'யுனஸ்கோ' 1999ல் இத்தினத்தை உருவாக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி