உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்ஆஸ்துமாவை தடுக்கும் மின்சார கார்அமெரிக்காவில் காற்றுமாசுவால் 37 சதவீத குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 2022 கணக்கின் படி, 5 சதவீதம் தான் மின்சார கார்கள் உள்ளன. இந்நிலையில் 2050க்குள் அனைத்து கார்களையும், மின்சார காராக மாற்றுவதன் மூலம் 28 லட்சம் குழந்தைகளை ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. மின்சார கார்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக சாலைகளில், அதிகரிக்கும் கார்பன் வெளியீட்டை தடுக்க முடியும். இதனால் காற்றுமாசுவால் குழந்தைகள் பாதிப்பதை தடுக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது.தகவல் சுரங்கம்முதல் பாதுகாப்பு அமைச்சர்இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக 39 பேர் பதவி வகித்துள்ளனர். தற்போது ராஜ்நாத் சிங் பதவி வகிக்கிறார். நாட்டின் முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் பல்தேவ் சிங். 1947 ஆக. 15 - 1952 மே 13 வரை பதவி வகித்தார். இவர் பஞ்சாபின் ருப்னாகரில் 1902 ஜூலை 11ல் பிறந்தார். சீக்கிய அரசியல் தலைவரான இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார். சிதறிக்கிடந்த சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில், அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுடன் இவர் இணைந்து செயல்பட்டார். 1952, 1957 என இருமுறை லோக்சபாவுக்கு தேர்வானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை