உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் கட்டடம்

அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் கட்டடம்

அறிவியல் ஆயிரம்கடலுக்கு அடியில் கட்டடம்தண்ணீருக்குள் மனிதன் வாழ முடியுமா என்ற கேள்விக்கு, ஒரு நீர்மூழ்கி கப்பலில் பல மாதங்கள் தங்கியிருக்கும் கப்பல்படை வீரர்கள், அமெரிக்காவின் பயோமெடிக்கல் இன்ஜினியர் 100 நாட்கள் கடலுக்கு அடியில் தங்கியது உள்ளிட்டவை பதிலாக உள்ளது. இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் (2050க்குள்) கடலுக்கு அடியில் வீடு அமைத்து, அங்கேயே குழந்தை பிறப்பை சாத்தியமாக்குவது பற்றி பிரிட்டனை சேர்ந்த 'டீப்' என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 'வான்கார்டு' என்ற கடலுக்கு அடியில் ஆறு பேர் தங்கக்கூடிய கட்டடத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ