அறிவியல் ஆயிரம் : பருவநிலையை காக்கும் மாங்குரோவ்
அறிவியல் ஆயிரம்பருவநிலையை காக்கும் 'மாங்குரோவ்'கடல் அலைகளில் இருந்து கடற்கரையை 'மாங்குரோவ்' காடுகள் பாதுகாக்கின்றன. இந்நிலையில் இவை, தென் கிழக்கு ஆசியாவில் 50 சதவீத கார்பன் வெளியீட்டை குறைக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணம் கார்பன் வெளியீடு. இந்தியா, வங்கதேச எல்லையில் உள்ள சுந்தர்வன காடுகள், மியான்மர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியாவில் மாங்குரோவ் மரங்கள் அதிகளவில் உள்ளன. இவை கார்பனை ஈர்த்து மண்ணுக்குள் சேர்க்கிறது. இதனால் ஆண்டுக்கு 77 கோடி டன் அளவு கார்பன் வெளியீடு குறைகிறது.