| ADDED : ஜன 16, 2024 08:08 PM
பழமையான காடுஉலகின் பழமையான காடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கெய்ரோ பகுதியில் இருந்துள்ளது என அந்நாட்டின் பிம்ஹாம்டன், கார்டிப் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் பழமையான பாறகைளின் இடைவெளியில் புதைபடிவ வேர்களை ஆய்வு செய்த போது, இது 38.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது, இது 400 கி.மீ., பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் உதவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.தகவல் சுரங்கம்நீளமான நதிஉலகின் நீளமானது நைல் நதி. நீளம் 6650 கி.மீ. அகலம் 2.8 கி.மீ. சராசரி ஆழம் 26 -36 அடி. இது தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11 நாடுகளில் பாய்ந்து மத்திய தரைக்கடலில் கலக்கிறது. ஆப்பிரிக்காவின் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் இந்த நதி நீர் செல்கிறது. வெள்ளை நைல், ஊதா நைல், அட்பாரா என மூன்று முக்கிய கிளை நதிகள் உள்ளன. மக்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு உயிரினம், தாவரங்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. இரண்டாவது நீளமான நதி அமேசான் (6575 கி.மீ.).