உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தொழுநோயை தோற்கடிப்போம்உலகில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஜன. கடைசி ஞாயிறு (ஜன.28) உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜன. 30ல் அனுசரிக்கப்படுகிறது. மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ் நுண்ணுயிரியால் இது உருவாகிறது. 'தொழுநோயை தோற்கடிப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பாதிப்பின் துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்த முடியும்.தகவல் சுரங்கம்தகவல் தனியுரிமைஇன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தகவல் சேமிப்பு, பரிமாற்றங்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. இதனால் ஒருவரது தகவல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தகவல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜன. 28ல் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், நைஜீரியா, ஐரோப்பாவில் 47 நாடுகளில் தகவல் தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அதிகரிக்கும் இணைய குற்றங்களை தடுப்பதற்கு தரவு பாதுகாப்பு அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை