| ADDED : பிப் 23, 2024 01:45 AM
சுவையற்ற வாயுபிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து அதிகமாக உள்ள தனிமம் ஹீலியம். மந்த வாயுக்களில் ஒன்று. இதன் அணு எண் 2. பிரான்சின் பியரி ஜான்சனுடன் 1868ல் இதை இணைந்து கண்டுபிடித்தவர் பிரிட்டனின் நார்மன் லாக்யர். அனைத்து வேதிப்பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.ஐ., ஸ்கேனர்களிலும் கடலுக்கு அடியில் நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கிலும் ஹீலியம் பயன்படுகிறது. இது நிறமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற வாயு. சூரியனில் மட்டுமல்லாமல், பூமியிலும் ஹீலியம் இருப்பதை 1895ல் வில்லியம் ராம்சே உறுதிபடுத்தினார்.தகவல் சுரங்கம் மேற்கு நோக்கி பாயும் ஆறு
இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் மூன்று. அவை நர்மதா, தபதி, மோகி. இதில் நர்மதா ஆறுக்குப்பின் இரண்டாவது நீளமானது தபதி. இது மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மத்திய இந்தியாவை வளப்படுத்துகிறது. இது நர்மதா ஆற்றின் தெற்குப்பகுதியில் தொடங்கி மேற்குநோக்கிப் பாய்ந்து கம்பாட் வளைகுடாவில் அரபிக்கடலில் கலக்கிறது. இதன் நீளம் 724 அடி. மேற்குநோக்கி பாயும் ஆறுகளில் இதற்கு அருணாவதி, கோமை, ஜிமா, மோரி உட்பட 14 கிளை ஆறுகள் உள்ளன. ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன.