மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மதுரை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் தெற்கு தொகுதி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் ஆய்வு செய்தார்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டும் குறைகளை உடனுக்குடன் சரி செய்ய முயற்சிகள் எடுப்பதுண்டு. நேற்று மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகம் சுகாதாரமற்று இருப்பதை அறிந்து நேரில் சென்று பார்வையிட்டோம். புதிய டியூப் பொருத்தி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவகத்தை சுத்தம் செய்து, பொருட்களின் நிர்ணயித்த விலையை தவிர்த்து கூடுதலாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவின் தரத்தை ஆய்வு செய்தோம். நான்கு நாட்களில் சீரமைப்பு பணிகள் முடியவில்லை என்றால், குழு மாற்றம் செய்யப்படும். இன்று புதுராமநாதபுரம் - ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிடவுள்ளோம் என்றார்.தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க., செயலாளர் முனியசாமி, பகுதி செயலாளர் புகழ்முருகன், தொண்டரணி அமைப்பாளர் அமிர்தராஜ், வட்டச் செயலாளர் மகேஷ்குமார் உடன் இருந்தனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025