| ADDED : ஏப் 04, 2024 03:58 AM
திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக ''பாரபட்சமின்றி அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யுமாறு,'' பறக்கும் படையினரிடம் கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் செலவினங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழவினர் பாரபட்சத்துடன் சோதனை செய்வதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரின் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது அவர், அனைத்து வாகனங்களையும் பாரபட்சம் இன்றி முழுமையாக சோதனையிட வேண்டும். அப்போது முழுமையாக வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் அறிவுறுத்தினார்.