உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் விரைவில் 10 ஏ.டி.எம்., மையம்

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் விரைவில் 10 ஏ.டி.எம்., மையம்

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வருகை தரும் பயணியர், ஏ.டி.எம்., மையங்களில் பணம் பெற போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயிலில் ஏ.டி.எம்., மையங்கள் நிறுவப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மட்டும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வார விடுமுறை நாட்களில், இந்த ஒரேயொரு ஏ.டி.எம்., மையத்தில் பணம் பெறுவதற்காக, பயணியர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பதால், கூடுதல் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.இதை தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், இரண்டு இடங்களில் 10க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:இரண்டு இடங்களில், மொத்தம் 10 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹிட்டாச்சி ஆகிய வங்கிகள் வாயிலாக, ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கி ஏ.டி.எம்.,கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இதுதவிர, பயணியர் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம்., வாகன ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில், பணிகள் முடிந்து, ஏ.டி.எம்., மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை