மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சென்னை:நம் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, சாலையின் மேற்பகுதியில் இருந்த உயரழுத்த மின்வடம், முறையாக பூமியில் பதிக்கப்பட்டுள்ளது.திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.இதற்காக, பூமியில் பதிக்கப்பட்ட உயர் அழுத்த மின்வடம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, வடிகால் அமைக்கப்பட்டது.வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் கூட, உயரழுத்த மின்வடம் மீண்டும் பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும், மின்வடம் தேங்கிய கழிவுநீருக்குள் செல்வதாலும், தற்போது திடீர் திடீரென மாலை நேரங்களில் மழை பெய்து வருவதாலும், விபத்து ஏற்படும் அச்சம் நிலவியது.இதுகுறித்து நம் நாளிதழில், புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, தற்போது மின் வாரியத்தினர், சாலையில் இருந்த உயரழுத்த மின்வடத்தை முறையாக பூமியில் பதித்துள்ளனர். இதனால், பாதசாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025