மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கிளைக்கு சுற்றப்பட்டு இருந்த முள்கம்பி அகற்றப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 100 ஆண்டுகளுக்கு மேலான அரியவகை மரங்கள் பூங்காவுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், இந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பூங்காவுக்கு சுற்றுலா வரும் சிறுவர்கள் தாழ்வாக பக்கவாட்டு மரக்கிளைகளை தொங்கியும், மரங்களின் மேல் ஏறியும் விளையாடுவது வழக்கம். இதனால், சிறுவர் விழுந்து காயமடையாமல் இருக்கவும், மரக்கிளைகள் உடையாமல் இருக்கவும், பூங்கா நிர்வாகம் சார்பில், மரக்கிளைகளில் முள் கம்பி சுற்றியுள்ளது.இதனை அறியாமல், மரக்கிளைகளின் அடியில் குனிந்து விளையாடும் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மலர் கண்காட்சியில் மழைக்கு சுற்றுலா பயணிகள் மரத்தடியில் ஒதுங்கிய நிலையில் ஒரு சிறுவனுக்கு முள்கம்பியால், நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இந்நிலையில், 'முள் கம்பியை அகற்றி, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்,' என, 'தினமலர்' நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, மரக்கிளைக்கு சுற்றிய முள் கம்பியை, பூங்கா நிர்வாகம் அகற்றி, மரத்தை சுற்றி வேலி அமைத்தனர். இதனை சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025