உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / குளங்களில் குளிக்க வேண்டாம்! கிராமங்களில் அறிவிப்பு: தினமலர் செய்தி எதிரொலி

குளங்களில் குளிக்க வேண்டாம்! கிராமங்களில் அறிவிப்பு: தினமலர் செய்தி எதிரொலி

உடுமலை : தடுப்பணை மற்றும் குளங்களில், குளிக்க வேண்டாம் என, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குடிமங்கலம் வட்டாரத்தில், கோடை மழை பரவலாக பெய்து, நீர்நிலைகளுக்கு வரத்து கிடைத்துள்ளது. குறிப்பாக, உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள், குளம், குட்டைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது.நீர்நிலைகளில், அபாயம் தெரியாமல், பலர் குளிக்கின்றனர். லிங்கமநாயக்கன்புதுாரிலுள்ள குட்டையில் மூழ்கி, வாலிபர் உயிரிழந்தார். ஆண்டுதோறும் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள நீர்நிலைகளில், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதைத்தவிர்க்க, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் நிர்வாகத்தினர் வாயிலாக நீர்நிலைகளின் கரையில், எச்சரிக்கை பலகை வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து, அனைத்து ஊராட்சிகளிலும் ஒலிபெருக்கி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'கோடை மழையால், நீர்நிரம்பியுள்ள தடுப்பணை, குளம், குட்டைகளில், குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட உள்ளது. தற்போது, வடுகபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், ஒலிபெருக்கி வாயிலாக, தடுப்பணைகளில் குளிக்க வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை