உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் நடக்க இருந்த தேர்வுகள் மாற்றம் :தினமலர் செய்தி எதிரொலி

அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் நடக்க இருந்த தேர்வுகள் மாற்றம் :தினமலர் செய்தி எதிரொலி

பரமக்குடி : மதுரை துவங்கி மானாமதுரை, பரமக்குடி பகுதிகளில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வேறு தேதிக்கு தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளது.ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதனால் ஏப்.2 முதல் 12க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதால் ஏப்.10ல் நடக்க இருந்த அறிவியல் தேர்வு 22 க்கும், ஏப்.12ல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23 க்கு மாற்றப்பட்டது.ஆனால் ஏப்.23ல் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். இது குறித்து தினமலர் நாளிதழில் மார்ச் 31ல் செய்தி வெளியானது.அதே நாளில் பரமக்குடியில் சித்திரைத் திருவிழா நடக்க உள்ள நிலையில் ஏப்.23ல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வை 24ம் தேதிக்கு மாற்றி நேற்று ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.இதே போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையிலும் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்