மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தண்ணீர் திறப்பு
21 hour(s) ago
பூண்டி கூட்டு சாலையில் மின் விளக்கு சீரமைப்பு
14-Dec-2025
வாய்க்கால் கரை சீரமைப்பு
13-Dec-2025
மதுரை: மதுரையில் நத்தம் ரோட்டில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில், மதிய உணவு சாப்பிடும் வாசகர்கள், பார்க்கிங் பகுதி பைப் அருகே உணவு மிச்சங்களை கொட்டி கை கழுவுகின்றனர். அப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதாக புகார் எழுந்தது. முதன்மை நுாலகர் தினேஷ் குமார், பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிப்பதாக கூறினார். இதுகுறித்து ஜூன் 2ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து நுாலக வளாகத்தில் வாசகர்கள் உணவருந்த தனியாக இருக்கைகளுடன் கூடிய கூடாரம், கைகழுவ தொட்டி பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதியில் உள்ள பைப்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் வளாகத்தில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டு சுகாதாரம் மீட்கப்பட்டுள்ளது.
21 hour(s) ago
14-Dec-2025
13-Dec-2025