உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி; பகல்நேர மையம் இப்ப பளிச்

தினமலர் செய்தி எதிரொலி; பகல்நேர மையம் இப்ப பளிச்

கோவை; கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, பகல்நேர பாதுகாப்பு மையம், நமது நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குனியமுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பகல்நேர பாதுகாப்பு மையத்தில் 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மையத்தின் சுற்றுப்புறம் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல், புதர் மண்டி கிடந்தது. இதனால், பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் தீண்டும் அபாயம் ஏற்பட்டது. மையத்தில் இருந்த விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜூலை 30ல் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்போது புதர் அகற்றப்பட்டு, அந்த இடம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !