தினமலர் செய்தி எதிரொலி
மேலுார்: கீழவளவு ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தும் மாத கடைசி வரை சப்ளை செய்யாமல் கார்டுதாரர்களை அலைக்கழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது.