உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  கெடிலம் ஆற்றில் மேம்பாலப்பணி மீண்டும் துவக்கம்

 கெடிலம் ஆற்றில் மேம்பாலப்பணி மீண்டும் துவக்கம்

கடலுார்: கெடிலம் ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த மேம்பாலப்பணி தினமலர் செய்தி எதிரொலியால் மீண்டும் துவங்கியது. புதுச்சேரி-கடலுார் சாலை, இரு வழி சாலையாகவும், சில இடங்களில் ஒரு வழி சாலையாகவும் உள்ளது. இதன் காரணமாக அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளிலும் குறைந்த பட்சம் இரு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் என்கிற ஒரே பாலம் மட்டுமே பயன்பட்டு வந்தது. இந்நிலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் ரூ. 22.250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆற்றின் குறுக்கே இருந்த பழைய இரும்பு பாலத்தை இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில், பாலம் கட்டுமானப்பணி துவங்கியது. பாலம் கட்டுமானப்பணி துவங்கி ஓராண்டு நிறைவடைந்தது. தரைதளத்தில் இருந்து பில்லர்கள் அமைத்து, மேல்தளம் போடும் பணி 50 சதவீதம் நிறைவடைந்தது. இந்நிலையில், வேகமாக நடந்து வந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. அதையொட்டி உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மேம்பால பணியினை மீண்டும் நேற்று துவக்கினர். இதையடுத்து, விரைவில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ