உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  மின்கம்பி, கம்பம் சீரமைப்பு திருத்தணி மக்கள் மகிழ்ச்சி

 மின்கம்பி, கம்பம் சீரமைப்பு திருத்தணி மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி: நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மின்வாரிய ஊழியர்கள் உடனே நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த மின்கம்பம், மின்கம்பிகளை சீரமைத்தனர். திருத்தணி நகராட்சி கே.கே.நகர் மேற்கு குறுக்கு தெருவில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடுகளுக்கு மின்கம்பங்கள் அமைத்து, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் கம்பம் மூலம் செல்லும் மின்கம்பியும் சேதமடைந்து, அறுந்து விழும் அபாய நிலையில் இருந்தது. அப்பகுதி மக்கள் பலமுறை மின்கம்பம், மின்கம்பியை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக நேற்று, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி மின்வாரிய அதிகாரிகள், உடனே மின்கம்பம் மற்றும் மின்கம்பியை சீரமைத்து, மின்வினியோகம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை