உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ராமநாதபுரத்தில் சேதமடைந்த காவிரி குடிநீர் குழாய் சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரத்தில் சேதமடைந்த காவிரி குடிநீர் குழாய் சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகே சேதமடைந்த காவிரி குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நடந்தது. ராமநாதபுரம் நகரில் ஜல்-ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் வழங்க குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை குழாய் மாற்றம் ஆகிய பணிகளால் காவிரி குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. குறிப்பாகலேத்தம்ஸ் பங்களா ரோட்டில் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகே சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதியில் சேதமடைந்த குழாய் சீரமைக்கப்பட்டுள்ளது என மக்கள் மகிழ்ச்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை