| ADDED : நவ 22, 2025 01:11 AM
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கள்ளிப்பட்டு கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட பிரதமர் ஜன்மன் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை மின் வாரிய அதிகாரிகள் நேற்று துவக்கினர். காஞ்சிபுரம் அடுத்த, 144 தண்டலம் ஊராட்சியில், கள்ளிப்பட்டு கிராமத்தில் பிரதமர் ஜன்மன் திட்டத்தில், 28 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவிந்தவாடி, புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, வீடுகள் இல்லாத இருளர் இனத்தவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை, குடிநீர் ஆகிய வசதிகளை வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மேம்படுத்தவில்லை. இதனால், புதிய வீடுகள் கிடைத்தும் இருளர் இனத்தவர்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுதும் இதே நிலை நீடிக்கிறது என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரிய அதிகாரிகள் பிரதமர் ஜன்மன் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின் வழித்தடத்தை ஏற்படுத்தி உள்ளனர். இரு தினங்களில், மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.