உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அகில இந்திய காங்., தலைவர்மல்லிகார்ஜுன கார்கே: தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களிடையே வெறுப்பை பரப்புகின்றனர். நாம் எளிதாக சுதந்திரம் பெற்று விட்டதாக, அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், சுதந்திரத்தைஅடைவதற்காக, பலர், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சிறைவாசம் அனுபவித்தனர்.டவுட் தனபாலு: சுதந்திரத்துக்காக பணக்கார குடும்பங்கள் மட்டுமில்லாமல், ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்னு பலரும் பங்களிப்பு செஞ்சிருக்காங்க... ஆனா, பணக்காரரான நேரு குடும்பத்தை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு, இந்த கருத்தை நீங்க சொல்வது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!தமிழக முதல்வர் ஸ்டாலின்: தனியார் துறையில், மூன்று ஆண்டுகளில் 78 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், 65,483 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரிக்குள், 75,000த்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.டவுட் தனபாலு: உங்க ஆட்சி அமைந்து, மூணு வருஷம்ஓடிடுச்சு... உங்க தேர்தல் அறிக்கையில், '3.50 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்'னு அறிவிச்சிருந்தீங்க... சொச்சம் இருக்கும் ரெண்டு வருஷத்துல, அதுல பாதி இலக்கையாவது எட்டுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக ரயில் திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில், 875 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில், 246 கோடி ரூபாயாககுறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒருபுறம் மத்தியஅரசு நிதி ஒதுக்கீட்டைகுறைக்கிறது. மறுபுறம், ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தராமல், தமிழக அரசு தாமதம் செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை கூறுவதை கைவிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அது தான் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லது.டவுட் தனபாலு: வாஸ்தவம்தான்... 'விடாக்கண்டன், கொடாக்கண்டன்' கதையாக, பா.ஜ.,வும் - தி.மு.க.,வும் நடத்துற அரசியல் பரமபதவிளையாட்டுல, தமிழகமக்களின் நலன்கள் தான் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Duruvesan
ஆக 17, 2024 17:43

நேரு தவிர யாருமே சுதந்திர போராட்ட தியாகி இல்லை என அடிமை கூவல்


D.Ambujavalli
ஆக 17, 2024 17:04

அன்று சிறையில் இருந்ததற்காகத்தான், நாலாம் தலைமுறைவரை கட்சியையும் ஆட்சியையும் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களே இங்கு மட்டும் என்ன, மிசாவில் சிறை சென்ற பலர் இருக்க, ஸ்டாலினுக்குத்தான் மிசா தியாகி பிம்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவர் சிறைபட்டது மிசாவிலா என்பதே சர்ச்சையில் உள்ளது


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:35

மாநில பாஜகவுக்கு என்ன நோக்கம் ???? மாநில அரசைக் குறை சொல்லியே, ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியே ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் ..... பாஜக அபிமானிகள் கூட கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் எதை நிரூபித்தீர்கள் என்று .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:31

மூன்று ஆண்டுகளில் 78 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. வைகோ சொல்வது போல இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:30

இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன ..... அந்த நாடுகளில் யாரும், யாருடைய தலைமுறையும் சுதந்திரத்துக்காக போராடியதை ஒரு பெருமையாக இன்றளவும் சொல்லிக் கொள்வதில்லை .... நேரு இருந்த சிறை பல்வேறு வசதிகள் நிரம்பப்பெற்றது .... ஒரு வி ஐ பி ஆக நடத்தப்பட்டார் ..... வீர சாவர்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வ உ சி, திலகர், கோகலே - இது நீண்ட லிஸ்ட் - ஆகியோர் பட்ட கஷ்டத்தில் துளிக்கூட படாதவர் நேரு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை