உள்ளூர் செய்திகள்

" டவுட் தனபாலு

இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன்: பல இடங்களில், தே.மு.தி.க.,வுடன் உடன்பாடு ஏற்படவில்லை. அதுபோன்ற இடங்களில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இப்போது தான் தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், எவ்வளவு இடங்களில் தனித்துப் போட்டி என்ற விவரம் இன்னும் வரவில்லை.டவுட் தனபாலு: ஆகாகா... என்னா கொள்கை... என்னா கோட்பாடு... நேத்து அ.தி.மு.க., கூட்டணி; இன்னிக்கு தே.மு.தி.க., கூட்டணி; அதுலயே, சில இடங்கள்ல தனித்துப் போட்டி... இப்படிப்பட்ட கொள்கைச் சிங்கங்கள் இருக்கிற அரசியல்ல, பா.ம.க.,வை மட்டும் குத்தம் சொல்றது ரொம்ப பாவம்ங்க...!

இ.கம்யூ., மதுரை மாவட்ட செயலர் மயிலேறி: மதுரை மாநகராட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 17 வார்டுகளில் போட்டியிட விரும்பியது. ஆனால், மதுரை மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகளின் அலட்சியத்தால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, 12 வார்டுகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.டவுட் தனபாலு: அதென்னங்க கணக்கு... தே.மு.தி.க.,ட்ட, 17 வார்டு கேட்டிருக்கீங்க... அவங்க தர மறுத்துட்டாங்க... கூட்டணி முறிஞ்சு போச்சு... தனியா போட்டியிட்டு உங்க பலத்தை நிரூபிக்கிறதா இருந்தா, அதை விட அதிகமான வார்டுல தானே போட்டியிடணும்... ஏன், 12டோட நிறுத்திட்டீங்க...?

பத்திரிகைச் செய்தி: திருச்சி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக சுஜாதா என்பவரை அறிவித்தார், தமிழக காங்., தலைவர் தங்கபாலு. உடனடியாக பேட்டியளித்த சுஜாதா, 'நான் விருப்பமனுவே தாக்கல் செய்யவில்லை. எனக்கு எப்படி சீட் ஒதுக்கலாம்... நான் போட்டியிட முடியாது' என மறுத்தார்.டவுட் தனபாலு: ஆயிரம் சொல்லுங்க... யார் எவ்வளவு காமெடி பண்ணாலும், காங்கிரஸ் காமெடிக்கு நிகர் காங்கிரஸ் தான்... உங்க காமெடிக்கு அடிமையாகி, என் பெயரையே டவுட் தனபாலுவுக்கு பதிலா, டவுட் தங்கபாலுன்னு மாத்திக்கலாமான்னு யோசிக்கிறேன்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை