உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும் வன்முறை ஏவி விடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடரும் பட்சத்தில், அந்நாட்டை நம் நாட்டுடன் இணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: என்னமோ, 'நெல்லை எக்ஸ்பிரஸ்ல எக்ஸ்ட்ரா ரெண்டு பெட்டிகளைஇணைங்க'ன்னு கேட்கிற மாதிரி இவ்வளவு ஈசியா கேட்கிறாரே...ஏடாகூடமா பேசுறது எப்படின்னு,தனியா 'ரூம்' போட்டு யோசிப்பாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா: 'ஆயுஷ்மான்பாரத்' எனும் காப்பீடு திட்டத்தைஅமல்படுத்தும்படி, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய அரசு பல முறை கடிதம்எழுதியது. மது விற்பனையில்மட்டுமே ஆர்வமாக உள்ள ஆம்ஆத்மி அரசுக்கு, மக்கள் நலனில் துளிகூட அக்கறை இல்லை.டவுட் தனபாலு: டில்லி மாநில அரசுக்கு சீக்கிரமே சட்டசபை தேர்தல் வருது... 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை அமல்படுத்தி, அதன் வாயிலா உங்க கட்சிக்கு ஓட்டுகள் திசைமாறிட்டா, ஆம் ஆத்மி வெற்றி பாதிக்கப்படுமே... ஓட்டு வங்கி அரசியலுக்கு முன்னாடி, மக்கள்நலன் எல்லாம் மண்ணாங்கட்டிக்குசமம் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: துாத்துக்குடி, சங்கர ராமேஸ்வரர்கோவில் நிலத்தை, பழனிசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில், எங்கள் கட்சி பிரமுகர் அம்பா சங்கர் ஆட்டுச் சந்தை அமைக்க உள் வாடகைக்குபெற்றுள்ளார். அதன் திறப்பு விழாவுக்கு அழைத்தார்; சென்றேன்;விற்பனையை துவக்கி வைத்தேன். மற்றபடி, கோவில் நிலம் எப்படி பெறப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியாது. திறப்பு விழாவுக்குசென்றது தவறு என, இப்போதுநினைக்கிறேன்.டவுட் தனபாலு: 'அமைச்சர் வந்து திறந்து வைக்கிறார்'னு சொல்லியே, அந்த சந்தைக்கு எல்லா வசதிகளையும் உங்க கட்சியினர் அதிகாரமா கேட்டு வாங்கியிருப்பாங்களே... உங்களைபோன்ற பொறுப்பான பதவியிலஇருக்கிறவங்க, ஒருமுறைக்கு நுாறு முறை யோசித்து, இந்தமாதிரி விழாக்களில் கலந்துக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:11

ஹெச் ராஜா பேசியது உண்மைதான் என்று புரிய வருகிறது: .... தூத்துக்குடியிஸ் சங்கர ராமேஸ்வரர் கோவில் நிலத்தில் சொற்ப வாடகைக்கு திமுகவினருக்கு கோவில் இடத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவன் அங்குள்ள வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளார். இந்து கோவிலின் சொத்துகளை கொள்ளையடிக்கும் அமைப்பு திமுக. இந்துக்களுக்கு விரோதமான ஸ்டாலின் அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:06

மூர்க்க நாடுகளை இணைத்துக் கொண்டால் தலைவலிதான் ..... நாடுமுழுவதும் நம்முடனே இருக்கும் மூர்க்கர்களைக் கண்காணிக்க வேண்டும் பாஜக அரசு ......


Suppan
டிச 05, 2024 16:46

சரியான கருத்து. எண்ணிக்கை இன்னும் கூடினால் அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. தேசமே எங்களுடையதுதான் என்பார்கள். . காஷ்மீரி பண்டிட்டுக்களை வெளியே தள்ள உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் "ரலைவ் த்சலைவ் கலைவ்" அதாவது நீங்கள் மதம் மாறுங்கள் அல்லது வெளியில் சென்றுவிடுங்கள். அல்லது இறந்துவிடுங்கள் ".


Anantharaman Srinivasan
டிச 05, 2024 13:37

அமைச்சர் கீதா ஜீவன் எல்லாம் தெரிந்து தான் திறப்பு விழாக்கு போயிருப்பார். நிலம் விவகாரமென்றவுடன் பல்டி. அவர் சொல்வதை அப்படியே நம்ப எல்லோரும் முட்டாள்கள் இல்லை.


HoneyBee
டிச 05, 2024 14:30

பொய் சொல்வது ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல. மடை மாற்ற இவர்களுக்கு சொல்லி தர வேண்டியது இல்லை


sankar
டிச 05, 2024 11:17

தெரியாது என்று ஒரு அமைச்சர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை