உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: எங்கு பார்த்தாலும், முதல்வர் தன் அப்பா பெயரை வைக்கிறார். மதுரையில் திறக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வைக்காமல், ராஜராஜ சோழன், கரிகாலன், பல்லவ மன்னர் பெயர்களை சூட்டலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதை ஏற்க முடியாது. டவுட் தனபாலு: நீங்க ஆட்சியில இருந்தப்ப, எல்லாவற்றுக்கும் ஜெ., பெயரை சூட்டுனீங்க... இப்ப, அவங்க முறை என்பதால், அடிச்சு ஆடுறாங்க... நல்லவேளையாக, ரயில் நிலையங்கள் எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்டுல இருக்குது... இல்லை என்றால், அவற்றுக்கும் அப்பா பெயரையே முதல்வர் சூட்டிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!காங்., - எம்.பி., சசி தரூர்: நாடு முழுதும், பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகி, ஆயிரக்கணக்கான பயணியர் தினமும் அவதிப்படுகின்றனர். இதற்கான முன் ஏற்பாடுகளில், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கறை காட்டவில்லை.டவுட் தனபாலு: பனிமூட்டம் என்பது இயற்கை... அதை மீறி, ஒரு அமைச்சர் என்ன செய்துட முடியும்... பனிமூட்டத்துக்கு மத்தியில, சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கி, எங்கேயாவது போய் முட்டிக்கிட்டா என்ன பண்றது...? அப்பவும், 'அமைச்சர் முன்னெச்சரிக்கையா செயல்படலை' என்று இதே சசி தரூர் குற்றம் சாட்டுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: தமிழக அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில், 5 முதல், 30 ரூபாய் வரை, எந்த அறிவிப்புமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.டவுட் தனபாலு: பொங்க லுக்கு, 1,000 ரூபாயை சிரமப்பட்டு குடுத்துட்டு, இப்படி சத்தமில்லாம திரும்ப எடுக்கிறாங்களோ...? முதல்வர் அடிக்கடி சொல்ற மாதிரி, 'நாங்கள் சொன்னதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என்பதில், இந்த அதிரடி கட்டண உயர்வும் அடக்கமோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஜன 20, 2024 23:52

மக்களே நீங்களும் பணம் கிடைத்தாலும் சொல்லாமல் ஓட்டை மாற்றி போட்டு விடுங்கள்.


Anantharaman Srinivasan
ஜன 20, 2024 23:49

சாராயகடைக்கும் பொது கழிப்பிடத்துக்கும் பெயர் வைக்கும் போட்டி இரண்டு திராவிட கழத்திலும் ஏற்படவில்லை..


Varadarajan Nagarajan
ஜன 20, 2024 14:43

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசியுனைடயதே. அவைகளுக்கு பொதுவான பெயர்களைத்தான் வைக்கவேண்டும். ஆனால் தற்போதைய மற்றும் முந்தய அரசுகள் அவ்வாறில்லாமல் அம்மா அல்லது அய்யா பெயரைத்தான் வைக்கின்றன. இதில் நல்ல போட்ட போட்டி மற்றும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இவர்களால் பொதுவான பெயர் வைக்கமுடியவில்லையென்றால் தமிழக அரசு திட்டம் என்றே இருக்கலாம். இந்த பெயர் வைக்கும் மற்றும் சிலை வைக்கும் கலாச்சாரத்திர்க்கு முறுப்புள்ளி வைக்கவேண்டும்


rajan
ஜன 20, 2024 07:57

சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கி, எங்கேயாவது போய் முட்டிக்கிட்டா என்ன பண்றது... மேகத்துள்ளாக விமானத்தை ஒட்டி ராடார் கண்களிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என்று மோடி சொன்னாரே. அப்படியானால் ஏன் எப்படி எங்கே விமானம் முட்டிக்கொள்ளும் என்பது டவுட் தனபாலுக்கு தெரியவில்லை


karupanasamy
ஜன 20, 2024 15:52

டேக் ஆப்பும் ராடார் உதவாது.


D.Ambujavalli
ஜன 20, 2024 07:02

ஒரு சிலர் பெற்ற ஆயிரம், எல்லார் தலையிலும், எல்லாப் பொருள்களிலும் விலையேற்றமாக. விடிகிறது சொல்லாததை செய்வதுதான் மிகையாக இருக்கிறது


கண்ணன்
ஜன 20, 2024 07:01

ஐயா ஸசி தரூருக்குப் பிடித்த அவரே புத்தகம் ஆங்கில அகராதி மட்டுமே; அவர் எதற்கு விமான இயக்கங்களைப்பற்றிப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்? சென்றவாரம் நிதி கமிஷன்களைப் பற்றி ஏதும் அறியாமல் உளறிக்கொட்டி அண்ணாமலையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதோ?!


Ambika. K
ஜன 20, 2024 03:10

திராவிட மாடல் இதுதான். டிரெய்லர் போடும் முன்பே கூவினால் என்ன செய்வது. இனி பால் விலை கூடும். இன்னும் ஒரு முறை வீட்டு வரி சாலை வரி என்று இன்னம் ஒரு ரவுண்ட் உள்ளது. 2024 பொது தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் டீசல் க்கு செஸ் மற்றும் மாநில அளவில் எதில் எல்லாம் கை வெய்க்க முடியும் என்று குழு வைக்க முடிவு.


புதிய வீடியோ