உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகியவற்றிலும், எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர். இதற்கு வசதியாக பொது சின்னம் தேவைப்படுகிறது. எங்களது பானை சின்னத்தையே பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். டவுட் தனபாலு: தமிழகத்தின்மிகப் பெரிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., கூட எடுக்காத அதிரடி முடிவை எடுத்திருக்கீங்களே... நிஜமாகவே, இந்த மாநிலங்கள்ல எல்லாம் போட்டியிட போறீங்களா அல்லது தேர்தல் கமிஷனை ஏமாற்றி, பொது சின்னத்தை வாங்க இப்படி, 'அடிச்சு' விடுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ்: இலவச பயண திட்டத்தால், பெண்கள் மாதம், 900 ரூபாய் வரை சேமித்து வருகின்றனர். இந்த திட்டம் துவங்கியது முதல் இதுவரை, 424 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து கழகங்களுக்கு 6,788 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கி உள்ளது.டவுட் தனபாலு: அரசு தரப்பில் இருந்து, இத்தனை ஆயிரம்கோடிகளை மானியமாக கொடுத்தும், போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் ஓடுகின்றன என்ற, 'டவுட்' எழுதே... நிர்வாகம் பண்றவங்க சரியில்லையோ என்ற, 'டவுட்' எழுவதையும் தவிர்க்க முடியலை!தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்: புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், ஓ.டி.டி.,யில் நான்கே வாரங்களில் வெளியாவதால், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால், பெரும் இழப்பு ஏற்படுகிறது. புதிய திரைப்படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகே, ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும்.டவுட் தனபாலு: இன்னைக்கு எந்த படம், தியேட்டர்கள்ல, ரெண்டு வாரம் தாண்டி ஓடுது... நடுத்தர மக்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற மாதிரி டிக்கெட், நொறுக்கு தீனிகள் விலையை குறைத்தால், தியேட்டர்களை நோக்கி மக்கள் சாரை சாரையாக வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
பிப் 22, 2024 22:02

திருமாவளவன் தேர்தல் கமிஷனை ஏமாற்ற, பொது சின்னம் வாங்கவில்லை. உதயசூரியன் சின்னத்தை தவிப்பதற்கே.


sankar
பிப் 22, 2024 12:46

குருமா கட்சி - இன்னும் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் - கோபால் பல்பொடி விற்போம்


duruvasar
பிப் 22, 2024 09:21

அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, லட்சதீவு, புதுச்சேரி என இந்த 4 தென்மாநிலங்களிலுள்ள தொகுதிகளில் போட்டியிடாமல் தேர்தலை புறக்கணிக்கும் திருமாவளவனை. வண்மையாக கண்டிக்கிறோம். இவர் முடிவை கட்டாயம் மறுபரிசீலனை செய்யவேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 22, 2024 08:16

இவருக்கு இருக்கிற திறமைக்கு.... ஐநா சபை தலைவர் அல்லது அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடலாம்.


D.Ambujavalli
பிப் 22, 2024 06:36

சம்பாதிப்பதில் ஒரு குடும்பம் கணிசமாக ஒரு சினிமாவுக்கே செலவிடும் நிலையில் யார் தியேட்டர் பக்கம் வருவார்கள்? நிர்வாகம் சரி இல்லையோ என்று உலகறிந்த உண்மைக்கு டவுட் படலாமா?


முக்கிய வீடியோ