வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படித் தமிழகத்தை மாற்றியதில் கம்யூக்களின் பங்கு அதிகம்
மேலும் செய்திகள்
யூகத்துக்கு பதில் இல்லை பழனிசாமி
30-Jul-2025
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: ஜாதி ஆணவ கொலைகள் நடப்பது, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது. இவற்றை தடுக்க, ஏற்கனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என அரசு வாதம் செய்தாலும், இது போன்ற சம்பவங்கள், புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன. டவுட் தனபாலு: 'ஜாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை நிறைவேற்றினால் தான், கூட்டணியில் நீடிப்போம்'னு ஒரு போடு போட்டு பாருங்களேன்... நீங்களும் அதை செய்ய மாட்டீங்க... தி.மு.க., அரசும் சிறப்பு சட்டம் கொண்டு வராது என்பதில், 'டவுட்'டே இல்லை! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., கூட்டணிக்கு சசிகலா வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ன என்று யூகமாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த யூகத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளது. பா.ஜ.,வுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என்பதை தெளிவாக அறிவிப்பேன். டவுட் தனபாலு: அது சரி... 'இண்டியா' கூட்டணிக்கு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் தலைமை... கூட்டணியில் எந்த கட்சியை சேர்க்கணும், சேர்க்க வேண்டாம்னு முடிவெடுக்கிற அதிகாரம் அவரிடம் தான் இருக்கு... அந்த அதிகாரத்தை, உங்களுக்கு தே.ஜ., கூட்டணி தலைமை தருமா என்பது, 'டவுட்' தான்! பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லி கடை, டீ கடை உள்ளிட்ட, 48 வகையான தொழில்கள்; தையல், சலவை கடைகள் போன்ற, 119 வகையான சேவை தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், அந்த கடைகளின் மின் இணைப்பை, வணிக இணைப்பாக மின் வாரியம் மாற்றும். கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். டவுட் தனபாலு: 'கிராமப்புறங்களை முன்னேற்ற பாடுபடுறோம்'னு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்றாங்களே... அதை இப்படித்தான் செய்வோம்னு சொல்லாம விட்டுட்டாங்களே... இதன் மூலமா, கிராமப்புற மக்களின் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு விழுமா என்பது, 'டவுட்' தான்!
இப்படித் தமிழகத்தை மாற்றியதில் கம்யூக்களின் பங்கு அதிகம்
30-Jul-2025