உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 17,340 மெகாவாட் அளவுக்கு மின் தயாரிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டிருந்தால், தமிழக மின் வாரியம், தனியாரிடம் அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த, 10 ஆண்டுகளில், 1 மெகாவாட் அளவுக்கு கூட, தமிழகத்தில் அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.டவுட் தனபாலு: நம்ம மாநிலத்திலேயே மின்சாரம் உற்பத்தி செய்து விட்டால், ஆட்சி யாளர்களுக்கு அதுல பெருசா லாபம் இருக்காதே... தனியாரிடம் விலை கொடுத்து வாங்குனா தானே, யூனிட்டுக்கு இத்தனை ரூபாய் என்ற வீதத்தில், கோடிகளில் கமிஷன் கொட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர், லாலு பிரசாத் யாதவ்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும், ஓ.பி.சி.,யினரின் ஓட்டுகள் வீணாகின்றன. இந்த இயந்திரத்தை, பா.ஜ.,வினர் எடுத்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். டவுட் தனபாலு: பீஹாரில் முன்னொரு காலத்தில் நடந்த உங்க ஆட்சியை, 'கற்கால ஆட்சி'ன்னு, உங்க மாநில எதிர்க்கட்சியினர் இப்பவும் சொல்றாங்க... மறுபடியும் ஓட்டுச் சீட்டு முறையை கேட்கிறதை பார்த்தால், அந்த கற்கால ஆட்சிக்கே திரும்பவும் எல்லாரும் போகணும்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!பத்திரிகை செய்தி: கள ஆய்வு கூட்டங்களில் நடந்த அடிதடி சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'டிச., 15ல் நடக்கவுள்ள பொதுக்குழுவில், அது எதிரொலிக்காமல் இருக்க வேண்டும்' என, மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.டவுட் தனபாலு: அது சரி... களஆய்வு கூட்ட கலவரங்களால, பழனிசாமி கலங்கி போயிருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... அ.தி.மு.க.,வில் நடக்கும் அடிதடிகளை பார்த்தால், கோஷ்டி சண்டை, வேஷ்டி கிழிப்புக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியை, இவங்க பின்னுக்கு தள்ளிடுவாங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAISANKAR
டிச 02, 2024 08:33

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அனல் மின் நிலையம் அமைய எதிர்த்து. போராட்டம் செய்தது பா ம க தான்.


புதிய வீடியோ