உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / எஜமானர் இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் தேடிய நாய்

எஜமானர் இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் தேடிய நாய்

ஷிவமொகா : தன் எஜமானர் இறந்தது தெரியாமல், அவரது நாய் 15 நாட்களாக மருத்துவமனையில் அவரை தேடி அலைந்தது.கர்நாடக மாநிலம் ஷிவமொகா, ஹொளஹொன்னுாரின், கன்னெகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா, 48. இரண்டு வாரங்களுக்கு முன், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் இவரை கிராமத்தின் சமுதாய சுகாதார பவனுக்கு அழைத்து வந்தனர். இவரது நாயும் பின் தொடர்ந்து, சமுதாய சுகாதார மையத்துக்கு வந்தது.இங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கூடுதல் சிகிச்சைக்காக ஷிவமொகாவின், மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பினார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், இதை அறியாத நாய், சமுதாய சுகாதார மையத்தில் தன் எஜமானர் இருப்பதாக நினைத்து இரண்டு வாரமாக, இங்கேயே காத்திருக்கிறது.தினமும் மருத்துவமனைக்கு சென்று, அனைத்து அறைகளிலும் தன் எஜமானரை தேடுகிறது. மருத்துவமனை ஊழியர்களும், நோயாளி களின் உறவினர்களும் விரட்ட முயற்சித்தால், குரைக்கிறது. இந்த நாய் பால கிருஷ்ணாவுடன் வந்ததை, அவருக்கு சிகிச்சை அளித்த ஊழியர் ஒருவர் கவனித் திருந்தார். இதை பிடித்து செல்லும் படி உள்ளாட்சி ஊழியர்களிடம், டாக்டர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.எனவே நேற்று முன்தினம், ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று, திடக்கழிவுகள் பிரிவு அருகில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை