UPDATED : மே 16, 2024 10:56 AM | ADDED : மே 16, 2024 05:56 AM
கோவை : பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி ஒன்பது வயது சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன், நீலம் தம்பதியின் மகன் திரிசூல வேந்தன், 9. நான்காம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர் திரிசூல வேந்தனுக்கு பகவத் கீதையின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து, ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட தியான ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் தெளிவாக கூறி அசத்தியுள்ளார் திரிசூல வேந்தன். சிறுவனின் இந்த முயற்சியை 'ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்து சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியது.