உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நிழல் இல்லாத நாள் பெங்களூருவில் அரிய நிகழ்வு

நிழல் இல்லாத நாள் பெங்களூருவில் அரிய நிகழ்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பூமிக்கு செங்குத்தாக சூரியன் இருக்கும் போது நிழல் இல்லாத நாள் ஏற்படும். இந்த தனித்துவமான வானியல் நிகழ்வு பெங்களூருவில் நேற்று நிகழ்ந்தது.நிழல் இல்லாத நாள் ஆண்டுக்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நிகழும். அங்கு நண்பகலில் சூரியனின் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக இருக்கும். இதனால் செங்குத்தாக இருக்கும் கட்டடங்கள், பொருட்கள், மனிதர்களின் நிழல் தரையில் விழாது.பெங்களூரு 13 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் அமைந்துள்ளதால், நேற்று இந்த நிகழ்வைக் காணும் வாய்ப்பை பெற்றது. இந்த நிகழ்வு பூமியின் அச்சுடன் தொடர்புடையது. அப்போது, சூரியன் குறிப்பிட்ட அட்சரேகைக்கு நேர் உச்சியில் இருக்கும் போது இந்த அற்புதமான தருணம் ஏற்படும். சுற்றுப்புறங்கள் நிழல்கள் இல்லாத பகுதியாக மாறும்.இந்திய வான் இயற்பியல் கழகம், வானியல் கல்வியை ஊக்குவிக்க இந்த நிகழ்வைப் பயன்படுத்துகிறது. பூமிக்கும் சூரியனுக்குமான உறவை இதன் வாயிலாக விளக்குகின்றனர்.அந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள், இந்திய வான் இயற்பியல் கழகத்தின் கோரமங்களா வளாகத்திற்கு நேற்று அழைக்கப்பட்டனர். அங்கு, நிழல் இல்லாத நேரமான பிற்பகல் 12:17 முதல் 12:23 மணி வரை, நேரடிச் செயல்பாடுகளை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி