உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தாயின் நினைவாக கோவில் கட்டி மகன்கள் நடத்திய கும்பாபிஷேகம்

தாயின் நினைவாக கோவில் கட்டி மகன்கள் நடத்திய கும்பாபிஷேகம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் கல்லல் அருகே வெளியாரியில் இறந்த தாயின் நினைவாக கோவில் கட்டி, மூன்று மகன்கள் கும்பாபிஷேகம் நடத்தி மகிழ்ந்தனர்.வெளியாரி தம்பதி கருப்பையா -- முத்துக்காளியம்மாள். இவரது மகன்கள் சண்முகநாதன், சரவணன், சந்தோஷ்குமார். அவர்களின் தாய் முத்துக்காளியம்மாள் குடும்ப கஷ்டத்திலும் விவசாய வேலை செய்து, மகன்களை படிக்க வைத்தார்.மேலாளர்சண்முகநாதன், பி.காம்., முடித்து புதுக்கோட்டையில் சுயதொழில் செய்கிறார். சரவணன் சிங்கப்பூரில் சுயதொழில் செய்கிறார். சந்தோஷ்குமார் அங்கு பன்னாட்டு நிறுவன மேலாளராக பணிபுரிகிறார்.கடந்த 2021ல் உடல்நலக்குறைவால், 62 வயதில் முத்துக்காளியம்மாள் இறந்தார். தாய் இல்லாத குறையை போக்கிக் கொள்ள மகன்கள் கூடி ஆலோசித்தனர். அதன்படி, தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தனர். இரண்டாண்டுகளில் அழகான கோவில் கட்டினர்.கோவில் விமானத்தில் தங்க கலசம் நிறுவினர். பழங்கால வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கோவில் கருவறையில், கும்பகோணத்தில் வடிக்கப்பட்ட 460 கிலோ எடையில், 5 அடி உயரத்தில் தாயின் ஐம்பொன் சிலையையும் பிரதிஷ்டை செய்தனர்.

அபிஷேகம்

இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க விமானத்திற்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சிலைக்கு அபிஷேகம் செய்தனர். மகன்கள் கூறியதாவது:அம்மாவின் நினைவாக, அவர் வளர்த்த 20 மாடுகளை பராமரிக்கிறோம். அவற்றை பராமரிக்க ஆட்களை நியமித்துள்ளோம். சுப, விசேஷ காரியங்களை இங்கு வந்து நடத்துவோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை