உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை

பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை

உடுமலை; பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனிமொழி.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூலாங்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி. எம்.ஏ., - பி.எட்., பட்டதாரியான இவர், தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தார். தற்போது இவர்,தமிழகத்தின் முதல் ஆம்னி பஸ் பெண் டிரைவராக மாறியுள்ளார். பொள்ளாச்சி முதல் சென்னை வரை, தன் சொந்த ஆம்னி பஸ்சை ஓட்டி வருகிறார்.இது குறித்து கனிமொழி கூறியதாவது: பள்ளி பருவம் முதலே சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்றுவந்தேன். குடும்ப வாழ்விற்கு வந்ததும், பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய நிலையில், பி.இ., படித்து, சுய தொழில் செய்த கணவர் கதிர்வேலுக்கு உதவியாக நிறுவனத்தை கவனித்து வந்தேன். தொலைதுாரத்துக்கு வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றபோது, நானும், கணவரும் மாறி மாறி கார் ஓட்டி வந்தோம். வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்த நிலையில், கணவருக்கும் ஆம்னிபஸ்கள்இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், இருவரும் 'ஹெவி டிரைவிங் லைசென்ஸ்' பெற்று, இரண்டு ஆம்னி பஸ்களைவாங்கினோம். 'அழகன் டிராவல்ஸ்' என்ற பெயரில், ஜனவரி முதல்எங்கள் பஸ்கள் இயக்கப்படும் நிலையில், மாற்று டிரைவருக்கு பதில் அவ்வப்போது ஆம்னிபஸ் ஓட்டினேன். கடந்த 15 நாட்களாக முழுமையாக ஓட்டி வருகிறேன்.பஸ்சில், 50 பயணியர் வரை இருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உணர்ந்தும், சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தது. எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், துணிச்சலும் இருந்ததால், சிரமம் தற்போது பெரிதாக தெரியவில்லை.சாலையில் செல்லும் போது, பயணியர் வரும் பஸ் என்பதை உணராமல், சிலர் வேண்டுமென்றே மது அருந்திவிட்டும், சாகசம் செய்வதற்காக பைக், கார் உள்ளிட்டவற்றை தாறுமாறாக இயக்குவதும் தான் வருத்தமாக உள்ளது.ஒரு பெண் பஸ் இயக்குவதை பார்க்கும் பயணியர் சிலர், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை வைத்துள்ளனர். இரவு முழுதும் இயக்கும் போது, பஸ்சில் பயணம் செய்தவர்கள் இறங்கி செல்லும் போது, நான் டிரைவிங் சீட்டில் இருப்பதை ஆச்சரியமாக பார்த்து, என்னை பாராட்டியும்செல்கின்றனர்.எங்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களை, 'மிஸ்' பண்ணுகிறேன். என் கணவர், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர். எந்த துறையிலும், ஆண், பெண் பேதமில்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Prakash C
மார் 04, 2025 17:08

சூப்பர் உடன்பிறப்பே அருமை. வாழ்த்துக்கள் அம்மணி. நானும் உடுமலை தான் கண்ணு. இப்போ கோயம்பத்தூர் லா இருக்கேன் கண்ணு. வெற்றி உனக்கே கண்ணு.


Bhaskaran
மார் 03, 2025 08:56

வாழ்த்துக்கள் மகளே நீ பல பேருந்துகளை வாங்கி பல பெண் ஓட்டுனர்வாய்ப்புதர வாழ்த்துக்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 03, 2025 06:22

நல்ல வேளை இவர் சொந்தமாக பஸ் வைத்து ஓட்டுகிறார். இதற்கு முன் டவுன் பஸ் ஓட்டிய பெண்னை யூ ட்யூப்கர்களூம் அரசியல் வாதிகளும் போட்டி போட்டு கொண்டு தினம் தினம் பேட்டி கண்டு அதை பத்திரிகைகள் ஊடகங்களில் வெளி வந்து அந்த பஸ் கம்பெனியினருக்கு அழுத்தம் அதிகமாகி அவரை பணியில் இருந்து நீக்கி விட்டார். இவர் சொந்தமாக பஸ் வைத்திருப்பதால் இவருக்கு அந்த மாதிரியான இடைஞ்சல்கள் வராது. எதற்கும் இவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்


TAMILNADU AROKKIYAM
மார் 02, 2025 22:17

வாழ்த்துக்கள் சகோதரி


KRISHNAN R
மார் 01, 2025 12:16

Congratulations


அ.சகாயராசு
பிப் 28, 2025 14:56

பஸ் ஓட்டுவதற்கு ஒரு பெண்ணுக்கு தைரியம் வேண்டும் .வாழ்த்துக்கள்


JAGADEESANRAJAMANI
பிப் 28, 2025 11:56

மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள். போதைவஸ்துக்களால் பெண்களுக்கு எதிரான செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. தற்காப்பு ஏற்பாடு செய்து பயணப்படுங்கள்.


Sundar Natarajan
பிப் 28, 2025 10:05

பாராட்டுகளும், வாழ்த்துக்களும் சகோதரி. உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள். இதுபோல் குடும்பதுக்கு உறுதுணையாகவும், போராட்டகுணமும், வெற்றியடையும் மனப்பாங்கும் அணைத்து பெண்களுக்கும் வேண்டும். குடும்பம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.


K RAGHAVAN
பிப் 28, 2025 08:31

ALL THE BEST SISTER GOD BLESS TO YOUR HAPPY JOURNEY


தியாகராஜன்,நாமக்கல்
பிப் 28, 2025 07:24

இருக்கிறவனுக்கே வேலை கிடைக்கல இதுல இவளுக வேற நாங்களும் பஸ் ஓட்டுவோம்னு வந்துட்டாளுக இதெல்லாம் திமிரெடுத்து பண்ணுகிற வேலை...


Jagan (Proud Sangi)
பிப் 28, 2025 20:02

பொறாம ?? ஹா ஹா உன்னைப்போல் அரைவேக்காடுள் புலம்புவது கேட்க சிரிப்பாக இருக்கு. போ போய் டாஸ்மாக் சரக்கு அடித்து கவுந்து படு. உன்னை போல் அட்கள் பூமிக்கு பாரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை