மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பல்லடம்:பெற்ற தாய்க்கு தன் குழந்தைகளை பார்க்க உரிமை இல்லையா? என, பல்லடம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் ஒருவர் கண்ணீருடன் போராட்டம் நடத்தினார்.பல்லடம், பொள்ளாச்சி ரோட்டை சேர்ந்தவர் பூபதி, 42, மனைவி லட்சுமி, 40. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர்.கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக உள்ள தனது கணவர், குழந்தைகளை கண்ணில் கூட காட்ட மறுப்பதாக கூறி, லட்சுமி, பல்லடம் மகளிர் ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.விசாரணை மேற்கொண்ட போலீசார், 'கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது நாங்கள் எதுவும் செய்ய முடியாது. வேண்டுமெனில், குழந்தைகளை காணவில்லை என புகார் கொடுங்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' எனக்கூறி, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து லட்சுமி கூறியதாவது:கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, எனது கணவர் குழந்தைகளுடன் மாயமானார். ஒரு ஆண்டாக குழந்தைகளை கண்ணில் கூட காட்டவில்லை. பெற்ற தாய்க்கு குழந்தைகளை பார்க்க கூட உரிமை இல்லையா?இப்போது, விவாகரத்து கேட்டு, என கணவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்தது. குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு குடும்பத்துடன் வாழவே விருப்பம்.குழந்தைகளை பார்க்க வேண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்குமாக அலைந்து வருகிறேன். என் குழந்தைகளை பார்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1