உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தாடியால் மினி வேனை இழுத்த முதியவர்

தாடியால் மினி வேனை இழுத்த முதியவர்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஒன்றே முக்கால் டன் எடை கொண்ட மினி வேனை முதியவர் தாடியால் இழுத்து சாதனை படைத்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சோழன் உலக சாதனை முயற்சிக்காக இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் 60 என்பவர் தனது தாடியில் கயிற்றை கட்டி 1700 கிலோ எடை கொண்ட மினி வாகனத்தை இழுத்தார். காரைக்குடி-திண்டுக்கல் ரோட்டில் 15 நிமிடங்களில் 510 மீட்டர் துாரம் இழுத்துச் சென்று சாதனை புரிந்தார். ஏற்கனவே நான்கு முறை இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். அவருக்கான பாராட்டு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ராம.அருணகிரி, டாக்டர்கள் முருகேசன், ராஜ்குமார், அருள்மணி நாகராஜன், வணிகர் சங்க செயலாளர் திருமாறன் வாழ்த்தினர். அவருக்கு சோழன் உலக சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை