உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கடலில் நீந்தி பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

கடலில் நீந்தி பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

மயிலாடுதுறை : உலக சாதனை முயற்சியாக ராமேஸ்வரம் முதல் சென்னை வரை கடலில் நீந்தி பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேற்று தரங்கம்பாடியில் இருந்து பழையார் புறப்பட்டனர்.வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் உலக சாதனை முயற்சியாக நடத்தும் இப்பயணத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15 பேர் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை, 604 கி.மீ. தொலைவிற்கு நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.கடந்த, 5ம் தேதி ராமேஸ்வரத்தில் நீச்சல் பயணத்தை தொடங்கிய இந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தினசரி காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை 12 மணி நேரம் பயணித்து நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை வந்தடைந்தனர். இரவு ஓய்வுக்கு பின் நேற்று காலை, அங்கிருந்து காலை கடல் வழியாக பழையார் நோக்கி புறப்பட்டனர். வரும், 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனைப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். இந்த நீச்சல் பயணத்தில் முற்றிலும் பார்வையற்ற மாணவர் லக் ஷய்குமார் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ