உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சீரியல் கதாபாத்திர பெயரால் சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுப்பு

சீரியல் கதாபாத்திர பெயரால் சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுப்பு

லண்டன் : பிரபலமான வலை தொடரின் கதாபாத்திர பெயரை வைத்ததற்காக, 6 வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட வினோத சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த லுாசி, 39, என்ற பெண், குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்துக்கு செல்ல திட்டமிட்டார்; அவரது 6 வயது மகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார். அந்த சிறுமிக்கு பாஸ்போர்ட் தர மறுத்த நிர்வாகம், அதற்கு வினோதமான காரணம் ஒன்றை தெரிவித்தது.அந்த சிறுமியின் பெயர் கலீசி. இது, 'வார்னர்ஸ் பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்த, 'கேம் ஆப் த்ரான்ஸ்' என்ற வலை தொடரின் பிரபலமான கதாபாத்திரத்தின் பெயர். அந்த பெயருக்கான காப்புரிமை, 'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனத்திடம் மட்டுமே இருப்பதால், அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வரும்படி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த லுாசி, நடந்த சம்பவம் அனைத்தையும் தன் சமூக வலைதளத்தில் விரிவாக பகிர்ந்தார். 'பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது ஏன் ஆட்சேபிக்கவில்லை; பெயர்களுக்கு கூடவா காப்புரிமை கோருவீர்கள்?' என, காரசாரமாக பதிவிட்டார்.அதன் பின் லுாசியை அழைத்த பாஸ்போர்ட் அதிகாரிகள், தவறுக்கு மன்னிப்பு கோரி, அவரது விண்ணப்பத்தை ஏற்றனர்.'கேம் ஆப் த்ரான்ஸ்' என்பது, 'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் எச்.பி.ஓ., தொலைக்காட்சியில் 2011 முதல் 2019 வரை எட்டு சீசன்களாக ஒளிபரப்பான தொடர். உலக அளவில் பிரசித்தி பெற்றது.இதில், டோத்ரகி என்ற கற்பனை மொழியை அதன் கதாசிரியர் உருவாக்கினார். அந்த மொழியில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கும் பெயர் வைக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரமான எமிலா கிளார்க்கின் கதாபாத்திரத்துக்கு கலீசி என பெயரிடப்பட்டு இருந்தது. இது, ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற கேரக்டராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி