உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தாயை இழந்த குழந்தைக்கு பாலுாட்டிய சுகாதார பணியாளர்

தாயை இழந்த குழந்தைக்கு பாலுாட்டிய சுகாதார பணியாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு : தாயை இழந்த பழங்குடியின குழந்தைக்கு பாலுாட்டிய சுகாதார பணியாளரை மக்கள் பாராட்டினர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வண்டன்பாறை பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் சந்தியா, 27. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரது கடைசி குழந்தைக்கு நான்கு மாதமாகிறது.இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு சந்தியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுகாதார துறை குழு சம்பவ இடத்திற்கு சென்றது. இந்த குழுவில் சுகாதார பணியாளர் அமிர்தா இடம்பெற்றிருந்தார்.பிரேத பரிசோதனை முடியும் வரை சந்தியாவின் வீட்டில் காத்திருந்த அமிர்தா, தாயை இழந்து பசியால் துடித்த நான்கு மாத குழந்தையை கண்டதும், தனது குழந்தை ஞாபகம் வந்து, பாலுாட்ட விருப்பம் தெரிவித்தார். சந்தியாவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததால், குழந்தைக்கு பாலுாட்டினார். பசியும் சோர்வும் நீங்கி குழந்தை உறங்கியது.அமிர்தா இவ்விஷயத்தை தன் கணவன் விஷ்ணுவிடம் தெரிவித்த போது, பாராட்டி மகிழ்ச்சியடைந்தார். பொதுமக்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அமிர்தாவை பாராட்டினர். இவர், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் எடவண்ணை சாத்தல்லூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்- - சதி தம்பதியரின் மகள். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, அட்டப்பாட்டிக்கு வந்தார். இவருக்கு, எட்டு மாதத்தில் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dhandapani
ஆக 18, 2024 16:23

இறைவன் அவ்வப்போது தாய் உருவில் வருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அது அமிர்தா என்றால் தாய் தான் அவரே குழந்தைக்கு அமிர்தம் வழங்கியது வாழ்த்துக்கள்


thangaraj
ஆக 18, 2024 09:55

தாய்மைக்கு நமஸ்காரம்


saravanan samy
ஆக 15, 2024 13:04

தாயிற் சிறந்த கோவில் இல்லை பாலூட்டிய இளம்தாய்க்கு கடவுள் அருள் பாலிப்பார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை