உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல்லில் மொய் விருந்து; மக்கள் மனங்கவர்ந்த பிரியாணி கடைக்காரர்

வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல்லில் மொய் விருந்து; மக்கள் மனங்கவர்ந்த பிரியாணி கடைக்காரர்

திண்டுக்கல்: கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, திண்டுக்கல்லில் பிரியாணி கடைக்காரர் முஜிபுர் ரகுமான் தனது ஓட்டலில் மொய்விருந்து நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகையை கேரளா அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில் 'முஜிப்பிரியாணி' கடைநடத்துகிறார். வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதி ஓட்டலில் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது. முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை,இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டது.ஆயிரம் பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றனர். கூட்டத்தை கருதி மேலும் 300 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.விருந்தில் பங்கேற்ற மக்கள் சாப்பிட்ட இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர். சிறுவர்கள் கூட தங்கள் சேமிப்புநாணயங்களை கொடுத்து விட்டு சென்றனர். மொய் விருந்து மூலம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கிடைத்தது.முஜிபுர் ரகுமான் கூறியதாவது: இயற்கை பேரிடர் ஏற்படும் நேரத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மதம், இனம், மொழி பாகுபாடு இல்லாமல் நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.அதற்கான முயற்சியாகதான் ஓட்டல் மூலமாக மொய்விருந்தை ஏற்பாடு செய்தேன். இதில் கிடைத்த தொகையை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் கேரளா அரசிடம் ஒப்படைக்க இருக்கிறோம். தொடர்ந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 09, 2024 22:58

இந்துக்கள் கத்திக்கு பயந்து மதம் மாறி மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். பங்களாதேஷில் ஹிந்துக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள், இங்கே இருக்கும் ஹிந்து இயக்கங்களும் ஹிந்துக்களும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே ஒரு கிறிஸ்டியனுக்கோ, முஸ்லீமுக்கோ நடந்து இருந்தால் இந்நேரம் மெழுகுவர்த்தியை துக்கொண்டு ரோட்டில் இறங்கி இருப்பார்கள். நமக்கு வெட்கமில்லை.


Karthikeyan S
ஆக 09, 2024 22:38

1000 பேரிடம் இருந்து 2.16 லட்சம் வசூல்.... தலா ஒருவர் கொடுத்தது 216 ரூபாய்..... மிக மிக குறைவான வசூல்


சாம்
ஆக 09, 2024 19:33

வயனாடு இசுலாமியர்கள் மசூதிக்கு தான் செல்லும்...


seimen
ஆக 09, 2024 14:06

அடுத்தவங்க பாதிக்கப்படும் போது ஆனந்த படுவது சில குறுகிய மனம் கொண்டவர்களுக்கு வாடிக்கை. ஆனால் இவர் செய்தது மிக பெரிய செயல்.. இறைவன் அருள் புரியட்டும்.


shakti
ஆக 09, 2024 14:01

ஆண்மை குறைப்பு மருந்துகள் எச்சரிக்கை...


Ramesh Sargam
ஆக 09, 2024 12:35

அதிகம் பாதிக்கப்பட்டது அவர்கள் சமூகத்தினராயிற்றே...


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 11:20

தனது ஓட்டலில் மொய்விருந்து நடத்தி... எப்படி?


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 11:19

காரணம் என்ன ???? பாதிக்கப்பட்டது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ......


Rajathi Rajan
ஆக 09, 2024 11:08

ஏன்ங்க... அதை நீங்களே ஏற்பாடு பண்ணலாமே கோவாலு...


Murali Dharan
ஆக 09, 2024 11:03

சேவை தொடரட்டும்....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை