உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி 35; ஆப்பிள், தர்பூசணி, இலை உள்ளிட்டவைகளில் பிரபலங்களின் உருவப் படத்தை வரைவார். அதேபோன்று பென்சில் போன்ற நுணுக்கமான பொருட்களிலும் உருவப் படங்களை வரைவார். நேற்று முன்தினம் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கார்த்தி, மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து அதனை மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுக்கு வழங்கினார்.அவர் கூறுகையில் ''ஓவியத்தை வித்யாசமான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல பழங்கள் மற்றும் இலைகள்,பென்சில் ஆகியவற்றில் உருவம் வரைவேன். மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து பக்தர்களுக்கு வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rangarajan
மே 26, 2024 03:11

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களுடைய பணி


Bala
மே 25, 2024 04:39

Congratulations, This is great work!!!


Subramanian
மே 24, 2024 09:01

வாழ்த்துகள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை