உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இளைஞர்கள் பலரை ஏமாற்றி திருமணம்: கலக்கல் கல்யாண ராணிக்கு கம்பி

இளைஞர்கள் பலரை ஏமாற்றி திருமணம்: கலக்கல் கல்யாண ராணிக்கு கம்பி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த், 29; மாட்டு தீவன விற்பனை பிரதிநிதி. மார்ச் மாதம் ஒரு செயலியில், ஈரோடு, கொடுமுடியை சேர்ந்த சத்யா, 30 என்பவரை தொடர்பு கொண்டு பழகினார். சத்யாவின் உறவினர் என, தமிழ்ச்செல்வி அறிமுகமானார்.சத்யா, தமிழ்ச்செல்வி ஆகியோர், மகேஷ் அரவிந்த்திடம் பணம் பெற்று வந்தனர். ஜூன், 21ல் தொப்பம்பட்டியில் மகேஷ் அரவிந்த்துக்கும், சத்யாவுக்கும், தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்தார். மாப்பிள்ளை வீட்டில் சத்யாவுக்கு, 12 சவரன் நகையை சீதனமாக அளித்தனர்.திருமணத்துக்கு பின், பல ஆண்களிடம் பேசி வருவதை அறிந்த மகேஷ் அரவிந்த், இதுகுறித்து சத்யாவிடம் கேட்டார். சத்யா, பலரை திருமணம் செய்து ஏமாற்றியதாக அப்போது கூறியுள்ளார். இதற்கிடையே, சத்யா, நகை மற்றும் பணத்துடன் திடீரென மாயமானார். மகேஷ் அரவிந்த் புகாரின்படி, தாராபுரம் போலீசார் விசாரித்தனர்.சத்யாவுக்கு தமிழ்ச்செல்வி புரோக்கராக செயல்பட்டு வந்ததும், திருமணத்துக்காக காத்திருக்கும் இளைஞர்களை திருமணம் செய்து, பணம், நகையுடன் மாயமாகி வருவதும் தெரியவந்தது. புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சத்யாவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, தாராபுரம் அழைத்துவந்தனர். இவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறியதாவது:ராஜேஷ் என்பவரை சத்யா முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஒரு குழந்தை பிறந்தது. பின், அவரிடம் விவாகரத்து பெறாமல், கொடுமுடி, ஈரோடு, சென்னை மற்றும் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் என, ஐந்து பேரை ஏமாற்றி திருமணம் செய்தார். கரூரைச் சேர்ந்த எஸ்.ஐ.,யிடம் பழகி ஏமாற்றியுள்ளார். ஒவ்வொருவரிடம் பழகி, பின் திருமணம் செய்து, மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். தாராபுரம் வாலிபரை ஏமாற்றி சென்ற சில நாட்களில், வேறு ஒரு நபரையும் திருமணம் செய்து ஏமாற்றி, பணத்தை பறித்துள்ளார். தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வி பிடிபட்டால், மொத்தம் எவ்வளவு பேரை திருமணம் செய்து சத்யா ஏமாற்றினார் என்பது தெரியவரும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2024 06:05

கொங்கு நாட்டினை தவறாக சித்தரிக்காதீர்கள் , ஒரு குடும்பம் BSNL லைன்களை திருடி அவர்களின் கம்பெனிக்கு பயன்படுத்தியதையே கேட்க துப்பில்லாத நீங்க ஒரு நாட்டினை தவறாக சொல்லுவது எவ்வளவு கீழ்த்தர


Senthil K
ஜூலை 15, 2024 20:08

எல்லாம்.. எங்கள் ஈரோடு ராமசாமி நாயக்கரின் பகுத்தறிவு.. வாழ்க்கை... இதற்கு போயி....


Ramarajpd
ஜூலை 15, 2024 11:18

திராவிடத் தங்கம்


venugopal s
ஜூலை 15, 2024 08:35

கொங்கு நாட்டுத் தங்கம் இவர் தானோ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை