உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 20 லட்சம் மரம் வளர்த்தவர் மண்ணுக்குள் விதையானார்

20 லட்சம் மரம் வளர்த்தவர் மண்ணுக்குள் விதையானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலன், 75. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை இறந்தார்.இவருக்கு, மனைவி லீலா, மகன்கள் ராஜேஷ், ரஜீஷ், ரஜனீஷ் ஆகியோர் உள்ளனர்.இவர், தன் வாழ்நாளில், 24 ஆண்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்து, பராமரித்து வளர்த்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், இயற்கையை பாதுகாப்பதை முக்கிய பணியாக கொண்டு செயல்பட்டார். எப்போதும், பச்சை நிற சட்டையும், வேட்டியும் அணிந்து, எப்போதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவதையே மேற்கொண்டார்.இவர், தரிசாக கிடந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, நீண்ட கால முயற்சியால் மரக்காடாக மாற்றி, வனத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை அமைத்தும், பழங்களை உணவாக வழங்கியும் முன்மாதிரியான செயல்பட்டு மக்கள் மனதை ஈர்த்தவர்.பல்வேறு அமைப்புகள் சார்பில், பல சுற்றுச்சூழல் விருது பெற்றுள்ளார். இவரது மரக்கன்று நடும் பணிக்காக, தனியார் நிறுவனம் இலவச வாகனம் வழங்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்தவர், மண்ணுக்குள் விதையானார் என, சுற்றுச்சூழல் ஆர்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
பிப் 11, 2025 14:16

இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்..


Subramanian
பிப் 11, 2025 08:01

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி