வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Very noble gesture. This will go in long way to support the kids. Wish this gesture is well communicated. God bless him
ஒரத்தநாடு, :அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கிய தொழிலதிபரை கிராம மக்கள் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 250 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளர்ச்சிக்காக, கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து, “திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை” என்ற அறக்கட்டளையை உருவாக்கி, செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்த தொழிலதிபரான கோவிந்தராஜ், 80, பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 30,000 சதுரடி நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ், நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.
Very noble gesture. This will go in long way to support the kids. Wish this gesture is well communicated. God bless him