உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பசியால் வாடும் ஏழைகளுக்கு இந்த ஓட்டலில் உணவு இலவசம்!

பசியால் வாடும் ஏழைகளுக்கு இந்த ஓட்டலில் உணவு இலவசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உணவு கொடுக்கும் இரக்க குணம் உள்ள பலர் உள்ளனர். கோவில்கள், ஆசிரமங்கள், அறக்கட்டளைகள் வைத்து இருப்பவர்கள் அன்னதானம் வாயிலாக பசி போக்கி வருகின்றனர். ஆனால் பணம் சம்பாதிப்பதற்கென ஓட்டல் நடத்துவோர், பசியால் வாடுவோருக்கு இலவசமாகவும் உணவு வழங்குவதை கேட்டதுண்டா?இதோ, கோவை ராம்நகர் ராஜபோஜனம் ஓட்டல் நிர்வாகத்தார், பசியோடு வரும் ஏழைகளுக்கு வயிறார உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள் யாராக இருந்தாலும், 'பசிக்கிறது, ஆனால் பணமில்லை' என்று சொன்னால் போதும்; உணவு ரெடி! காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதம் கொடுக்கின்றனர்.ஓட்டல் நிர்வாக இயக்குனர் கார்த்திக் கூறுகையில், ''பணம் கொடுத்து உணவு சாப்பிட வசதி இல்லாதவர்கள் பலர் உள்ளனர். ஏழைகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் பசி என்று வந்து எங்கள் ஓட்டலில் கேட்டால், பார்சல் கட்டி கொடுத்து விடுவோம். தினமும், 10 பேருக்கு மேல் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். எத்தனை பேர் வந்தாலும் கொடுப்போம். அவர்களுக்கென தனியாக சமையல் செய்யப் போவதில்லை. எல்லோருக்கும் சமைப்பதில் சிறிது இல்லாதவர்களுக்கும் கொடுக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ