உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  குப்பையில் இலவச காலணிகள்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 குப்பையில் இலவச காலணிகள்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச காலணிகளை, குப்பையில் வீசிய, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பரமசிவம், 57, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உசிலம்பட்டியில், 2019 - -20ம் ஆண்டில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச காலணிகளை, புத்துார் மலையடிவாரம், வடுகபட்டி மயானம் அருகில், பூதிப்புரம் பாழடைந்த கிணறு அருகே இரு நாட்களுக்கு முன் குப்பையாக கொட்டியிருந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரித்தனர். இதில், அந்தாண்டு இலவச காலணிகள் வினியோகித்த பின், மீதம் இருந்தவற்றை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது அரசு உதவி பெறும் பள்ளி. நிர்வாக குளறுபடியால் கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. பள்ளிக்கு ஐந்தாண்டுகளாக தலைமையாசிரியர் பொறுப்பில் பரமசிவம் உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், எந்த அனுமதியும் இன்றி, அரசுக்கு சொந்தமான பொருளை அலட்சியமாக குப்பையில் வீசியது தெரிந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து, கல்வி அதிகாரி செந்தில்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை