மேலும் செய்திகள்
இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
19-Dec-2025 | 1
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
17-Dec-2025 | 3
ஊட்டி; ஊட்டியில் உள்ள ஒரு டீ கடைக்கு வாங்கப்பட்ட பாலில் புழு நெளிந்ததால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள, இளம் படுகர் சங்க வளாகத்தில், டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு, ஆவின் பால் பாக்கெட் வாங்குவது வழக்கம்.நேற்று காலை, கடை ஊழியர், சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து மொத்தமாக, 'ஆவின்' பால் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு) பாக்கெட் வாங்கியுள்ளார்.தொடர்ந்து, கடைக்கு சென்று பாலை கொதிக்க வைப்பதற்காக, பால் பாக்கெட்டை வெட்டி ஊற்றும் போது, வெள்ளை நிறத்தில் புழுக்கள் நெளிந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த கடைக்காரர், உணவு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து ஆய்வு செய்தபோது, புழுக்கள் நெளிந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், நேற்றைய (18ம் தேதி) தேதியிட்டு ஆவின் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.அலுவலர் சிவராஜ் கூறுகையில், ''குறிப்பிட்ட 'பேட்ஜ்' எண் கொண்ட ஆவின் பக்கெட்டுகள் சப்ளை செய்யப்பட்ட கடைகளில், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்த பிறகு தெரிவிக்கப்படும். தவறு இருப்பின், சம்பந்தப்பட்ட ஆவின் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நீலகிரி ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில்,''உணவு பாதுகாப்பு அலுவலர் குறிப்பிட்ட 'பேட்ச்' உள்ள பால் பாக்கெட்களை ஆய்வு செய்தபோது, புழுக்கள் இல்லை. விவசாயிகளிடம் வடிகட்டி பால் வாங்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தில் அந்த பால் தரமாக கையாளப்படுகிறது.ஆவின் பாலை, குளிர் பதன பெட்டியில் வைத்தால், 7 நாட்களுக்கு கெடாது. ஒருவேளை வெளியே வைக்கும் பட்சத்தில், கெட்டுப் போக வாய்ப்புள்ளது.மூடி வைக்கப்படாத பாலில், ஈ முட்டை போட வாய்ப்புள்ளது. நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, கழுவாத பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றிஇருக்கலாம். அங்கு, 'ஈ லார்வா' இருந்திருக்கலாம்.ஒரு நாளைக்கு, 30 லட்சம் லிட்டர் தரமான பால் கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. இந்த புகார் திட்டமிட்ட சதி; சம்பந்தப்பட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.
19-Dec-2025 | 1
17-Dec-2025 | 3