உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது

மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: மஹாராஷ்டிராவை சேர்ந்த அரசு ஆரம்ப பள்ளி, கற்பித்தல் முறையில் புதுமையை புகுத்தியதற்காக, 2025ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 'டி4 எஜுகேஷன்' என்ற கல்வி அமைப்பு கொரோனா தொற்றுக்குப் பின், உலகளாவிய கல்வித்துறையில் ஏற்பட்ட இடர்களை சமாளிக்கவும், புதுமையான கல்வி முயற்சிகளை ஊக்குவிக்கவும் நிறுவப்பட்டது. கல்வியில் புதுமை உலகம் முழுதும் உள்ள பள்ளிகளை இணைத்து, அவர்களுக்குள் அனுபவங்களை பகிர செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். இந்த அமைப்பு, 2022 முதல் உலகின் சிறந்த பள்ளிகள் என்ற விருதை வழங்கி வருகிறது. இது ஐந்து பிரிவுகளில் ஐந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, சமூக விருப்ப விருது என்ற சிறப்பு பிரிவின் கீழும் விருது வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஓட்டெடுப்பு மூலம் இந்த விருதுக்கு பள்ளிகள் தேர்வு செய்யப் படுகின்றன. அந்த வகையில் உலகின் சிறந்த பள்ளிக்கான சிறப்பு விருது இந்தாண்டு மஹாராஷ்டிரா மாநிலம், கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர அரசு ஆரம்பப் பள்ளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியை முற்றிலும் புதுமைப்படுத்தும் வகையில் பாடத்திட்டத்துக்கு இசைவான அமைப்பு என்ற முறையை இந்த பள்ளி அறிமுகப் படுத்தியது. புதிய பரிமாணம் இந்த முறையில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆசிரியராகவும் கற்பவராகவும் மாறுகின்றனர். இவ்வாறு வயது வேறுபாடின்றி மாணவர்கள் இணைந்து கற்பது, குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்துவதோடு, கல்வியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக விருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது. அடுத்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடக்கும் உலக பள்ளிகள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !