மேலும் செய்திகள்
இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
19-Dec-2025 | 1
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
17-Dec-2025 | 3
அண்ணா நகர் ;அண்ணா நகர் கிழக்கு, 'என்' பிளாக், 24வது தெருவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு, 'ட்ரோன்' கேமரா பறந்துள்ளது. ஒரு குடியிருப்பின் படுக்கையறை ஜன்னல் அருகே, 'ட்ரோன்' சென்று நோட்டமிட்டுள்ளது.நள்ளிரவில் வினோதமான சத்தம் கேட்டு பக்கத்து குடியிருப்பில் வசித்தவர்கள் பார்த்தபோது, வெளிப்புறத்தில் ஜன்னல் அருகில் 'ட்ரோன்' பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்தோர் அந்த ட்ரோனை பிடித்தனர். ஜன்னல் வழியாக பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் பைக்கில் நின்றிருந்தார்.அந்த நபர், ட்ரோனை விடுவிக்கும்படி மிரட்டியுள்ளார். குடியிருப்புவாசிகள் இறங்கி வந்த பார்த்த போது, மர்ம நபர் தப்பி மாயமானார். இந்த சம்பவம், அருகில் உள்ள குடியிருப்புகளிலும் பரவியதால், அங்கு பலரும் திரண்டனர்.நள்ளிரவில் படுக்கை அறைகளை நோட்டமிட பறக்கவிடப்பட்டதா அல்லது திருட்டு சம்பவத்திற்காக திட்டமிடப்பட்டதா என, குடியிருப்புவாசிகள் பீதியடைந்து உள்ளனர்.அண்ணா நகர் போலீசாரிடம் கேட்டபோது, 'ட்ரோன் தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை. சம்பவத்தின் உண்மை தன்மை அறிய, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களைஆய்வு செய்கிறோம்' என்றனர்.
19-Dec-2025 | 1
17-Dec-2025 | 3