உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாயை இழந்து தவிக்கும் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பாலுாட்டும் அதிசயத்தை பார்ப்போர் மகிழ்ச்சியடைகின்றனர்.திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள். இவர் வளர்த்த ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. சில நாட்களில் நோய் தாக்கி ஆடு இறந்தது. இதனால் இரு குட்டிகளும் தாய் இல்லா பிள்ளைகளாய் தவித்தன.இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தொண்டியம்மாள் வளர்க்கும் நாய் அந்த தாய் இல்லா ஆட்டுக்குட்டிகளின் கண்ணீரை கண்டு உருகியதால் ''அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர்பூசல் தரும்,'' என்ற ஐயன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டிகளுக்கு தாயாக மாறிதினமும் பாலுாட்டி வளர்த்து வருகிறது.ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் சம்பவத்தை கேள்விபட்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சரஸ்வதி அம்மாள் கூறியதாவது:முதலில் ஆட்டுக்குட்டியை நாய் கடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் நாய் அந்த ஆட்டுக்குட்டியை தன் பிள்ளை போல் அரவணைத்து அன்பு காட்டி பாலுாட்டி வருகிறது. இது எங்களுக்கே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.தாயின் இடத்தையும், தாய்மை எனும் உன்னத பண்பையும், இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. அதுபோலத்தான் ஆட்டுக்குட்டிக்கு நாய் பாலுாட்டி தனது தாய்மையை உணர்த்தியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குறும்புக்காரன்
ஜன 14, 2024 07:15

அட அது அம்பள நாய்ப்பா


ஆரூர் ரங்
ஜன 12, 2024 14:57

தாய்ப்பாலுக்கு பதில் நாய்ப் பாலாவது கிடைக்கிறதே. எந்த ஜென்மத்து நன்றிக் கடனோ.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை